மைசூரு தசரா பூஜையில் 3 தலித் அமைச்சர்ககளுக்கு அனுமதி மறுப்பு.. நேரடியாக தலையிட்ட முதலமைச்சர் டி.கே. சிவகுமார்

நந்தி துவஜ பூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்க முதலமைச்சர் டி.கே சிவகுமார் வருகை தந்தார்.
டி.கே. சிவகுமார்
Published on: 
Summary

கர்நாடகாவில் தசரா பூஜையில் 3 தலித் அமைச்சர்கள் அனுமதிக்கப்படாதது குறித்து அதிகாரிகள் மீது விசாரணை நடத்த முதலமைச்சர் டி.கே. சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் மைசூருவில் தசரா கொண்டாட்டங்களின் போது நடைபெற்ற பூஜையில் மூன்று தலித் அமைச்சர்களை காவல்துறை அதிகாரி தடுத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

தசரா பூஜை

கடந்த அக்டோபர் 21 அன்று, ஜம்பு சவாரி காட்டில் கோட்டே ஆஞ்சநேய சுவாமி கோயிலில் தசரா பூஜை நடைபெற்றுள்ளது. குறிப்பாக அங்கு நடைபெற்ற பாரம்பரிய நந்தி துவஜ பூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்க முதலமைச்சர் டி.கே சிவகுமார் வருகை தந்தார்.

அதேநேரம் இதில் பங்கேறக் தலித் சமூகத்தை சேர்ந்த கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் சிவராஜ் தங்கடகி, வேளாண்மை அமைச்சர் பி.எம். நரேந்திர சுவாமி மற்றும் முஸ்ராய் அமைச்சர் கே.எஸ். பசவராஜு ஆகியோர் வருகை தந்தனர்.

தடுத்து நிறுத்தம்

ஆனால் முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மற்றும் மைசூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் யதீந்திர சித்தராமையா ஆகிய இருவரும் மட்டுமே பூஜை மண்டபத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

3 அமைச்சர்களும் மண்டபத்திற்குள் நுழைய முயன்றபோது, ​​மைசூர் காவல் கண்காணிப்பாளர் சி.பி. ரிஷ்யந்த் அவர்களின் வழியை மறித்தார்.

சிவகுமார் தலையீடு

இதனால் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், முதலமைச்சர் டி.கே. சிவகுமார் நேரடியாகத் தலையிட்டு, அதிகாரிகளை கடித்துக்கொண்டு அமைச்சர்களை பூஜையில் பங்கேற்க அனுமதிக்குமாறு அறிவுறுத்தினார்.

இந்த சம்பவம் சர்ச்சை ஆனதை தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள தலைமைச் செயலாளர் ஷாலினி ரஜனீஷ்க்கு முதலமைச்சர் டி.கே. சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.

விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் சிவகுமார் உறுதியளித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com