ஜம்மு-காஷ்மீரில் இரண்டு லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

சிஆர்பிஎஃப் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையர்கள் எனத் தகவல்.
என்கவுண்டர்
என்கவுண்டர்
Published on: 
Summary

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியைச் சேர்ந்த லத்தீப் பாத் மற்றும் அவனது கூட்டாளி ஆகியோர் பாதுகாப்புப்படை வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியைச் சேர்ந்தவர் லத்தீஃப் பாத். இவர் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் இயக்கப்பட்ட நபர் என்று நம்பப்படுகிறது. தெற்கு காஷ்மீரில் உள்ள நெட்வொர்க் மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று தலைமறையாக இருந்துள்ளார். இந்த நிலையில் பாதுகாப்புப்படை வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

லத்தீஃப் பாட் பல பயங்கரவாத சம்பவங்களில் சம்பந்தப்பட்டிருந்தவர்

2026-ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் லத்தீஃப் பாட் ஏற்னவே சம்பந்தப்பட்டிருந்தார். ஜூலை 22-ந்தேதி லால் சவுக் பகுதியில் கான்ஸ்டபிள் கொல்லப்பட்டதிலும், ஜூலை 31-ந்தேதி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டதிலும் சம்பந்தப்பட்டிருந்தார்.

சிஆர்பிஎஃப் போஸ்ட் மீது தாக்குதல்

கடந்த நவம்பர் 11-ந்தேதி குல்காமில் உள்ள மிர் பஜார் அருகில் உள்ள சிஆர்பிஎஃப் போஸ்ட் மீது தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் இரண்டு பயங்கரவாதிகளும் காட்டுப்பகுதிக்கு தப்பிச் சென்றனர்.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் இரண்டு சிறப்பு போலீசார் அதிகாரிகளை சுட்டுக்கொன்றனர். பயங்கரவாத தடுப்பு செயல் பணிக்காக சென்றபோது இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதனால் ஜம்மு-காஷ்மீர் முழுவரும் பலத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இரண்டு பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

X