ரூ.1.5 கோடி.. நம்பி ஏமாந்த ஓனர்.. வீட்டில் கைவரிசை காட்டிய சமையல்கார ஜோடி

நகை திருட்டு வழக்கில் 12 ஆண்டுகளாக சமையல் வேலை செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
Bihar Cook Couple Jewellery Heist
Published on
Summary

பீகாரில் உள்ள ஒருவரின் வீட்டில் இருந்து சுமார் 50 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை திருடப்பட்ட வழக்கில், அந்த வீட்டில் வேலை செய்து வந்த விபா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமையல் வேலை

பீகார் பேபர் மில் காலனியில் உள்ள ஷாலினி மிஷ்ரா என்பவரின் வீட்டில் ஜிதேந்திர பண்டிட் மற்றும் அவரின் மனைவி விபா தேவி ஆகியோர் 12 ஆண்டுகளாக சமையல் வேலை பார்த்து வந்தனர்.

இதையடுத்து அந்த தம்பதியினர் வீட்டு உரிமையாளர்களிடம் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதன் காரணமாக அவர்கள் வீட்டில் உள்ள படுக்கை அறை வரையிலும் செல்லும் அதிகாரம் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றது.

நகை திருட்டு

இதனை தவறாக பயன்படுத்தி கொண்ட அந்த தம்பதிகள் தங்களது சொந்த ஊரான லக்னோவிற்கு செல்லும் போது, உரிமையாளரின் வீட்டில் இருந்த மதிப்புமிக்க பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

திருடிச் சென்ற பொருட்களை விற்று, அதன்மூலம் கிடைத்த பணத்தை தங்கள் வங்கிகளில் வரவு வைத்துள்ளனர்.

இதையடுத்து சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் காணாமல் போனதாக ஆகஸ்ட் 12 அன்று வீட்டின் உரிமையாளர் மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் வீட்டின் உரிமையாளர் சமையல் வேலை பார்த்து வந்த ஜிதேந்திரா மற்றும் விபா ஆகியோர்களை குற்றவாளிகளாக குறிப்பிட்டனர்.

போலீசார் வழக்கு பதிவு

இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த அதிகாரிகள், பீகாரில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த விபாவை கைது செய்தனர். அப்போது அவரிடம் சுமார் 55.4 கிராம் எடையுள்ள இரண்டு தங்க வளையல்களும், ரூ.25,000 ரொக்கமும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் அந்த நகைகளும் ரொக்கமும் திருடப்பட்ட பொருட்களுடன் தொடர்புடையவை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, தலைமறைவாகியுள்ள விபாவின் கணவரை புலனாய்வு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com