இந்தியாவில் வளர்த்து வரும் 100 ஆளுமைகள் - TIME இதழ் வெளியிட்ட பட்டியல்

இந்திய அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்திய எஸ்ஐஆர் குறித்த தேர்தல் ஆணையர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடு குறித்த கட்டுரையை எழுதியவர் ரித்திகா சோப்ரா ஆவார்.
TIME
Published on: 
Summary

இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றி வரும் வளர்ந்து வரும் 100 ஆளுமைகளை 'டைம்' இதழ் பட்டியலிட்டுள்ளது.

'டைம் 100 நெக்ஸ்ட் இந்தியா' என்ற என்ற பெயரில் வெளியாகி உள்ள பட்டியலில் தொழில், கலை, அறிவியல், விளையாட்டு, சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த செல்வாக்கு மிக்க 100 பேர் இடம்பிடித்துள்ளனர்.

இந்த பட்டியலை இந்தியா மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ள 'டைம்' இதழின் செய்தியாளர்கள் தேர்வு செய்துள்ளனர்.

பட்டியல்

கலைத் துறையில் ஆலியா பட், டாப்சி, ஆர்யன் கான், சமந்தா, சாய் பல்லவி, இஷான் கட்டர், நயன்தாரா, பார்வதி திருவோத்து, பா. ரஞ்சித், விக்கி கவுஷல், ஜிதேந்திர குமார், துல்கர் சல்மான், இயக்குநர் அனுபர்ணா ராய் ஆகியோர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

இசைத் துறையில் இருந்து அறிவு, அனிருத், தில்ஜித், இஷான் கோஷ், ஜஸ்லீப் ரோயல், பிரதீக் குந்த் ஆகியோர் தேர்வாகியுள்ளார்கள்.

தொழிலதிபர்கள் நிகில் காமத், அதார் பூனாவாலா உள்ளிட்டோரும் பட்டியலில் உள்ளனர்.

விளையாட்டு துறையில் சூர்யவன்ஷி, குகேஷ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பட்டியல் இடம்பெற்றுள்ள சிறப்பிதழ் குறித்த வரும் டிசம்பர் 12 ஆம் தேதி மும்பையில் ஜியோ வேர்ல்டு மையத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்த இதழின் அட்டைப்படத்தில் ஆலியா பட் இடம்பெற்றுள்ளார். இவர் டைம்ஸ் இதழிலும் பலமுறை இடம்பெற்று அசத்தியுள்ளார்.

இதழியல்

இதழியல் துறையிலிருந்து அனந்த் கோயங்கா மற்றும் மூத்த பத்திரிகையாளர் ரித்திகா சோப்ரா ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்திய எஸ்ஐஆர் குறித்த தேர்தல் ஆணையர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடு குறித்த கட்டுரையை எழுதியவர் ரித்திகா சோப்ரா ஆவார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆணையர்களில் இருவரான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், வாக்காளர் பட்டியல் கையாளுதல் மற்றும் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக ஆணையத்தின் முடிவுகளுக்கு எதிராக 10 மாதங்களில் குறைந்தது 14 முறைதங்களது முறையான ஆட்சேபனைகளைப் பதிவு செய்திருந்ததை அவர் ஆதாரங்களுடன் வெளியிட்டார்.

X