பஞ்சாபில் கைதேர்ந்தவரை போல் போதைப்பொருளை பயன்படுத்திய 10 வயது சிறுவன்: இணையத்தில் சர்ச்சை

போதைப்பொருளை பயன்படுத்திய கபூர்தலாவை சேர்ந்த 10 வயது சிறுவனை போலீசார் கண்டறிந்தனர்.
10-year-old using drugs in Punjab sparks outrage
Published on: 
Summary

பஞ்சாபில் 10 வயது சிறுவன் ஒருவன் போதைப்பொருள் உபயோகப்படுத்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் மன்சா நகரில் சமீபத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு ஆர்வலர் பர்விந்தர் சிங் ஜோட்டா படுகொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து தற்போது 10 வயது சிறுவன் ஒருவன், கையில் சிறிய தகரம் மற்றும் பேப்பர் தாளை வைத்துக்கொண்டு, ஒரு நிபுணரை போன்று போதைப்பொருளை உறிஞ்சும் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை தொடர்ந்து, கபூர்தலாவை சேர்ந்த அந்த 10 வயது சிறுவனை போலீசார் கண்டறிந்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட குழந்தையை மீட்ட போலீசார், மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் பாவா ஹென்றி கூறுகையில், போதைப்பொருள் தற்போது குழந்தைகளையும் சென்றடைந்துள்ளதை இந்த காணொளி காட்டுவதாகவும், இது போதைப்பொருள் நடமாட்டத்தின் தீவிரத்தை உணர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எம்.பி.ஹர்சிம்ரத் கவுர் பாதல்

சிரோமணி அகாலி தல் எம்.பி.ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறுகையில், ஒரு போதைப்பொருள் நிபுணரை போன்று சிறுவன் போதைப்பொருளை உறிஞ்சுவது கொடூரமாக உள்ளதாக குறிப்பிட்டார்.

கொடூரமாக உள்ளது

மேலும், போதைப்பொருள் என்பது இனி ஒரு நெருக்கடி மட்டுமல்ல, அது உங்கள் ஆட்சியில் பஞ்சாபின் எதிர்காலத்தை முழுமையாக, அமைப்புரீதியாக அழிக்கும் ஒரு செயலாகும் எனவும் குறிப்பிட்டார்.

ஆம் ஆத்மி அரசு நலிவடைந்த மற்றும் வறுமை நிலையில் உள்ள குழந்தைகளை குறிவைக்க போதைப்பொருள் மாஃபியாக்களுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளதாகவும் பாதல் குற்றம்சாட்டினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com