ஒரே நாளில் 10 பச்சிளம் குழந்தைகள்.. 3 வாரங்களில் 60 குழந்தைகள் - மேற்கு வங்க அரசு மருத்துவமனையில் பலி

மருத்துவமனையின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.
குழந்தை
குழந்தை
Published on

மேற்கு வங்க மாநிலம் மால்டா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த ஆகஸ்ட் மாதத்தின் முதல் 3 வாரங்களில் மொத்தம் 60 பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

இச்சம்பவத்தை தொடர்ந்து, மாநில சுகாதாரத் துறை மால்டா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.

உயிரிழந்த பல குழந்தைகள் மால்டா மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்படுவதற்கு முன்பு சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் மற்றும் வட்டார அளவிலான சுகாதார மையங்களிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஒரே நாளில் 10 குழந்தைகள் பலி

ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் ஒரே நாளில் 10 பிறந்த குழந்தைகள் உயிரிழந்தன. இதில் 8 குழந்தைகள் பிற அரசுக் மருத்துவமனைகள் அல்லது தனியார் நர்சிங் ஹோம்களில் பிறந்த பிறகு, மேல் சிகிச்சைக்காக மால்டா மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு வரப்பட்டவை ஆகும்.

மிகவும் ஆபத்தான நிலையிலேயே இக்குழந்தைகள் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டதாகவும், மூச்சுத்திணறல் மற்றும் இதயப் பிரச்சினைகள் காரணமாகவே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

மால்டா மருத்துவக் கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளர் பிரசென்ஜித் பார் கூறும்போது, "ஆகஸ்ட் 12 அன்று ஒரே நாளில் மால்டா மருத்துவக் கல்லூரியில் 10 குழந்தைகள் உயிரிழந்தன.

ஆனால் அவற்றில் இரண்டு குழந்தைகள் மட்டுமே இந்த மருத்துவக் கல்லூரியில் பிறந்தவை.

மற்ற குழந்தைகள் மிகவும் ஆபத்தான நிலையில் பிற மருத்துவமனைகளில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டவை" என்று தெரிவித்தார்.

ஒரே நாளில் உயிரிழந்த 10 குழந்தைகளில், 4 குழந்தைகளுக்குப் பிறவி இதய நோய் இருந்ததாகவும், 2 குழந்தைகளுக்கு கடுமையான மூச்சுத்திணறல் இருந்ததாகவும் பிரசென்ஜித் பார் மேலும் விளக்கமளித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com