

ரெயில் சத்தம் கேட்டு ஆடுகள் தண்டவாளப் பகுதியில் சிதறி ஓடின. இதில் ரெயில் மோதி 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியானது. மேலும் பல ஆடுகள் படுகாயமடைந்து துடிதுடித்தன. இதனை கண்ட ஆடுகளின் உரிமையாளர்கள் தவித்தனர்.
தெலுங்கானா மாநிலம், யாதாத்ரி-புவனகிரி ஜுலூரு அலிநகரைச் சேர்ந்தவர்கள் 2 பேர் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.
நேற்று இரவு ஆடுகளை பிபினகர்-காட்கேசர் இடையே உள்ள தண்டவாளம் அருேக தங்க வைத்திருந்தனர். இன்று அதிகாலையில் ஆடுகளின் உரிமையாளர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது தக்ஷின் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. ரெயில் சத்தம் கேட்டு ஆடுகள் தண்டவாளப் பகுதியில் சிதறி ஓடின. இதில் ரெயில் மோதி 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியானது.
மேலும் பல ஆடுகள் படுகாயமடைந்து துடிதுடித்தன. இதனை கண்ட ஆடுகளின் உரிமையாளர்கள் தவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த அருகே இருந்த கிராம மக்கள் தண்டவாளத்தில் துடிதுடித்த சில ஆடுகளை போட்டி போட்டுக் கொண்டு தூக்கிச் சென்றனர்.
சம்பவ இடத்திற்கு ரெயில்வே போலீசார் சென்று விசாரித்தனர். இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம். விபத்தில் சில ஆடுகள் காயமடைந்ததாகவும், அவற்றை உள்ளூர் பொது மக்கள் எடுத்து சென்றதாக ஆடுகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். ரெயில்வே போலீசார் ஆடுகளை இறைச்சிக்காக தூக்கிச் சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.