கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்-அமைச்சருக்கு, தேசிய தொற்று நோய் தடுப்பு நிறுவனம் பாராட்டு

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்-அமைச்சருக்கு, தேசிய தொற்று நோய் தடுப்பு நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் மனோஜ் முரேக்கர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.
தேசிய தொற்று நோய் தடுப்பு நிறுவனருடன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தேசிய தொற்று நோய் தடுப்பு நிறுவனருடன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை:

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக தடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் ஏற்படும் இறப்பு சதவீதமும் தடுக்கப்பட்டுள்ளது. கொரோனா இறப்பு சதவீதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது.

இந்தநிலையில் ஐ.சி.எம்.ஆர். நிறுவனத்தைச் சேர்ந்த தேசிய தொற்று நோய் தடுப்பு நிறுவனத்தின் இயக்குனரும், கொரோனா தடுப்பு தேசிய பணிக்குழுவைச் சேர்ந்த முன்னணி உறுப்பினருமான டாக்டர் மனோஜ் முரேக்கர் மற்றும் துணை இயக்குனர் டாக்டர் பிரதீப் கவுர் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

அப்போது தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் பீலாராஜேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com