நன்னிலம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது

நன்னிலம் அருகே சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

நன்னிலம்:

நன்னிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அச்சுதமங்கலம் மாரியம்மன் கோவில் அருகே சாராய விற்பனை செய்த ஒருவரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பாக்கம் பருத்தியூர் நடுத்தெருவை சேர்ந்த சிவக்குமார் (வயது42) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல் அச்சுதமங்கலம் மதகு அருகில் சாராய விற்பனை செய்த அச்சுதமங்கலத்தை சேர்ந்த வீரமணிகண்டன் (21) என்பவரை கைது செய்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். நல்லமாங்குடி புது பாலம் அருகில் மது பாட்டில்களை விற்பனை செய்த சரவணன் (43) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com