தினகரன் தலைமையில் அ.தி.மு.க. இரு அணிகள் இணையும்: நாஞ்சில் சம்பத்

அ.தி.மு.க. இரு அணிகளும் விரைவில் இணையும் அதற்கு டி.டி.வி. தினகரன் தலைமை வகிப்பார் என நாஞ்சில் சம்பத் கூறினார்.
தினகரன் தலைமையில் அ.தி.மு.க. இரு அணிகள் இணையும்: நாஞ்சில் சம்பத்
Published on

போளூரில் அ.தி.மு.க. அம்மா அணியின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயல்வீரர் கூட்டம் நடந்தது. ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பாபு முன்னிலை வகித்தார்.

மாவட்ட செயலாளர் ஏழுமலை தலைமை வகித்தார். கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்றார்.

தமிழகத்திற்கு வந்த பிரதமர் மோடி இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் கலைஞரை சந்தித்தது அரசியல் மாற்றம் ஏற்படுமா என்ற பதிலுக்கு நாங்கள் பதில் சொல்ல தேவையில்லை.


நடிகர் கமலுக்கு அறிவும் அறிமுகமும் உள்ளது. கட்சி ஆரம்பிக்கவும் முதல்வராக வருவதற்கும் அனைத்து தகுதியும் உள்ளது. ஆனால் மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

சென்னையில் பருவ மழைக்கு 2 சிறுமிகள் பலியானதற்கு அமைச்சர்கள் ராஜினமா செய்து இருக்க வேண்டும்.

அ.தி.மு.க. அம்மா அணியில் அனைத்து பொறுப்புக்கும் நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. இரு அணிகளும் விரைவில் இணையும் அதற்கு டி.டி.வி. தினகரன் தலைமை வகிப்பார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com