சுய அரசியல் லாபத்துக்காக மட்டுமே இலங்கை தமிழர் விவகாரத்தை சீமான் பயன்படுத்துகிறார்: நமல் ராஜபக்சே

சுய அரசியல் லாபத்துக்காக மட்டுமே இலங்கை தமிழர் விவகாரத்தை சீமான் பயன்படுத்துகிறார் என்று நமல் ராஜபக்சே கூறியுள்ளார்.
சுய அரசியல் லாபத்துக்காக மட்டுமே இலங்கை தமிழர் விவகாரத்தை சீமான் பயன்படுத்துகிறார்: நமல் ராஜபக்சே
Published on

கொழும்பு:

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த சில மணி நேரங்களில், இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே டுவிட்டர் மூலம் அவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் சீமான், இலங்கை முன்னாள் அதிபரின் மகன் ரஜினிகாந்துக்கு வாழ்த்து சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், சீமான் எழுப்பிய கேள்விக்கு ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே டுவிட்டரில் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

சுய அரசியல் லாபத்துக்காக மட்டுமே இலங்கை தமிழர் விவகாரத்தை சீமான் பயன்படுத்துகிறார். இலங்கை தமிழர்கள் மீது சீமானுக்கு உண்மையில் அக்கறையில்லை என தெரிவித்துள்ளார்.

#namalrajapakse #seeman #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com