நாகமலைபுதுக்கோட்டை அருகே முதியவரை அரிவாளால் வெட்டியவர் கைது

நாகமலைபுதுக்கோட்டை அருகே முதியவரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

மதுரை:

நாகமலை புதுக்கோட்டையை அடுத்த துவரிமான் இந்திரா நகரைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள் (வயது 60). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சாலக்கருப்பு (54) என்பவருக்கும் இடையில் ஏற்கனவே முன்விரோதம் உள்ளது.

இந்த நிலையில் பாண்டியம்மாள் தனது கணவர் அய்யாவு (78) உடன் அந்த பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த சாலக்கருப்பு பாண்டியம்மாளுடன் தகராறில் ஈடுபட்டார். அய்யாவு இதனை தட்டிக் கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சாலக்கருப்பு அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் அய்யாவுக்கு படுகாயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக பாண்டியம்மாள் நாகமலைபுதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து அய்யாவுவை அரிவாளால் வெட்டியதாக சாலக்கருப்புவை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com