நாகை அருகே வாகனம் மோதி 2 பேர் பலி

நாகை அருகே வாகனம் மோதி 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை அருகே வாகனம் மோதி 2 பேர் பலி
Published on

நாகப்பட்டினம்:

நாகை அருகே உள்ள ஏனாங்குடி கீழத்தெருவைச் சேர்ந்தவர் கண்ணையன் (வயது 60). இவர் அதே பகுதியில் ரோட்டில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த ஆட்டோ மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திட்டச்சேரி இன்ஸ்பெக்டர் குலோத்துங்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

நாகை அருகே உள்ள வவ்வாலடி அண்ணா நகரைச் சேர்ந்த மணி மனைவி மணியம்மாள் (வயது 50). இவர் கடை வீதியில் நடந்து சென்றார். அப்போது அந்தவழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயம அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் திட்டச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மணியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com