மேற்கு வங்காளத்தில் கொல்லப்பட்ட 80 பாஜகவினருக்கு கூட்டு தர்ப்பணம் தந்த ஜே.பி.நட்டா

மேற்கு வங்காளம் மாநிலத்தில் அரசியல் மோதல்களில் கொல்லப்பட்ட 80 பாஜக தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று கூட்டு தர்ப்பணம் தந்தார்.
ஜேபி நட்டா தர்ப்பணம் தந்த காட்சி
ஜேபி நட்டா தர்ப்பணம் தந்த காட்சி
Published on

மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் கட்சி மற்றும் பாஜக தொண்டர்களிடையே சமீபகாலமாக நடந்த அரசியல் மோதல்களில் இருதரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இறந்த முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் அவர்கள் மறுமையில் நற்பேற்றினை பெறவும் தர்ப்பணம் கொடுக்கும் மகாளய அமாவசை தினமான இன்று மேற்கு வங்காளம் மாநிலத்தில் அரசியல் மோதல்களில் கொல்லப்பட்ட 80 பாஜக தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா கூட்டு தர்ப்பணம் தந்தார்.

தர்ப்பணம் முடிந்த பின்னர் கொல்லப்பட்ட பாஜக தொண்டர்களின் குடும்பத்தாரை ஜே.பி.நட்டா தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com