நச்சலூர் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது

நச்சலூர் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

நச்சலூர் அருகே உள்ள நங்கவரம் பகுதியில் குளித்தலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நங்கவரம்-நெய்தலூர் செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே சிலர் டிராக்டரில் மணல் கடத்தி கொண்டிருந்தனர்.

இதையடுத்து மணல் கடத்தியதாக டிராக்டர் உரிமையாளர் நங்கவரத்தை சேர்ந்த பரமசிவம் (வயது 45). டிரைவர் ஹரிகிருஷ்ணன் (21) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அந்த டிராக்டரும் மணலுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com