எனக்கு இன்று மகிழ்ச்சியான நாள் - வைகோ

தண்டனையை குறைக்கும்படி கேட்கவில்லை என்றும், தனக்கு இன்று மகிழ்ச்சியான நாள் என்றும் வைகோ கூறியுள்ளார்.
வைகோ
வைகோ
Published on

சென்னை:

தேச துரோக வழக்கில் நீதிபதி தீர்ப்பு அளித்த பிறகு வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள். வாழ்க்கையில் முக்கியமானநாள். குற்றவாளி என்று கூறியதும் உடனே தண்டனையை அறிவியுங்கள் என்று கூறினேன்.

குறைந்தபட்ச தண்டனை கொடுங்கள் என்று நான் கேட்டதாக நீதிபதி கூறியது தவறு. அதிகபட்ச தண்டனை கொடுங்கள் என்றுதான் கோர்ட்டில் வாதம் செய்தேன். பாராளுமன்றத்தில் என் குரல் ஒலிக்காது என்றவர்களுக்கு நான் ஏதும் கூறவிரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com