முத்துப்பேட்டை அருகே கந்துவட்டி புகாரில் ஒருவர் கைது

முத்துப்பேட்டை அருகே கந்துவட்டி புகாரில் ஒருவர் கைது

முத்துப்பேட்டை அருகே கந்துவட்டி புகாரில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை பகுதியில் கந்துவட்டி புகார்கள் அதிகமாக போலீசாருக்கு வருகிறது. இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உத்தரவுப்படி டி.எஸ்.பி. இனிகோ திவ்யன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் தம்பிக்கோட்டை கீழகாடு பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரது வீட்டை போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அவர் கந்து வட்டி வாங்கியது தொடர்பான ஆவணங்கள் சிக்கியது. அதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com