

திருப்பூர்:
திருப்பூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 48). இவருடைய தந்தை முத்துக்கருப்பு. குடும்பத்தகராறில் கடந்த 15-12-2016 அன்று வீட்டில் இருந்த முத்துக்கருப்புவின் கழுத்தை சுப்புராஜ் கத்தியால் அறுத்து கொலை செய்ய முயன்றார். அக்கம் பக்கக்தில் உள்ளவர்கள் முத்துக்கருப்புவை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பிறகு அவர் உயிர்பிழைத்தார்.
இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்புராஜை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருப்பூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.1-ல் நடந்து வந்தது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் சுப்புராஜ் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் நேற்று திருப்பூர் புஷ்பா பஸ் நிறுத்தத்தில் வைத்து சுப்புராஜை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுபோல் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க வடக்கு போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.