

புதுச்சேரி:
மும்பையை சேர்ந்தவர் வினேதி (வயது26). இவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க புதுவை வந்தார். பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஓட்டலில் தங்கி புதுவை சுற்றுலா தளத்தை பார்த்து வந்தார்.
நேற்று இரவு வினேதி எஸ்.வி. பட்டேல்சாலையில் நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது பின்தொடர்ந்து வந்த ஒரு வாலிபர் வினேதியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த வினேதி இதுகுறித்து பெரியகடை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் வினேதியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது முத்தியால்பேட்டை சோலைநகரை சேர்ந்த பிரகாஷ் (29) என்பது தெரிய வந்தது. இதையடுத்து பிரகாசை போலீசார் கைது செய்தனர். #tamilnews