சிலி: நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி - 15 பேர் மாயம்

சிலி நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் இறந்தனர். மேலும், நிலச்சரிவில் மாயமான 15 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிலி: நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி - 15 பேர் மாயம்
Published on

சாண்டியாகோ:

சிலி நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் இறந்தனர். மேலும், நிலச்சரிவில் மாயமான 15 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிலி நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் தாழ்வான பகுதிகளில் நீர் நிரம்பி வருகிறது. கனமழையால் அங்குள்ள வீடுகள், பள்ளிகள் மற்றும் பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. பலத்த மழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.

இதற்கிடையே, சிலியின் சுற்றுலா பகுதியான வில்லா சாண்டா லூசியா பகுதியில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சேற்றில் சிக்கி 2 பெண்கள் மற்றும் சுற்றுலா வந்த ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளனர். மேலும், 15-க்கு மேற்பட்டோரை காணவில்லை. மாயமானவர்களை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வில்லா சாண்டா லூசியா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை துரிதமாக எடுக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

சிலி நாட்டில் அதிபருக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் அங்கு நிலச்சரிவில் சிக்கி 3 பேர் இறந்தது சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com