முதலியார்பேட்டையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் சிக்கினர்

முதலியார்பேட்டையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் சிக்கினர்.
கைது
கைது
Published on

புதுச்சேரி:

மரப்பாலம் பெட்ரோல் பங்க் அருகே நேற்று மாலை 2 வாலிபர்கள் மறைவிடத்தில் நின்று கொண்டு கஞ்சா விற்பனை செய்வதாக முதலியார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், சப்- இன்ஸ்பெக்டர் வீரபுத்திரசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை மடக்கி பிடித்து அவர்களின் சட்டை பையில் சோதனை நடத்தினர்.

அப்போது அவர்களின் சட்டை பையில் சிறு, சிறு பொட்டலங்களாக கஞ்சா இருந்தன. மொத்தம் 40 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.

இதையடுத்து அதனை பறிமுதல் செய்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை சேர்ந்த கனகராஜ் (வயது 24)மற்றும் மூலகுளம் ஜெ.ஜெ. நகரை சேர்ந்த ஷியாம் ஜோஸ் (19) என்பதும், கஞ்சா புகைக்கும் பழக்கம் உள்ள இவர்கள் தொடக்கத்தில் தங்கள் தேவைக்கு போக மீதம் உள்ள கஞ்சாவை விற்க தொடங்கி உள்ளனர்.

இதில், வருமானம் கிடைக்கவே இதனையே தொழிலாக கொண்டு திருவண்ணாமலைக்கு சென்று ஒரு பெண்ணிடம் மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com