நான் டோனியின் தீவிர ரசிகன்- எம்.எஸ்.கே.பிரசாத்

நான் டோனியின் மிகப்பெரிய ரசிகன். அவரது சாதனைகள் அளப்பரியது என்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக இருந்த எம்.எஸ்.கே. பிரசாத் கூறினார்.
எம்எஸ்கே பிரசாத்
எம்எஸ்கே பிரசாத்
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக இருந்த எம்.எஸ்.கே. பிரசாத்தின் பதவி காலம் சமீபத்தில் முடிவடைந்தது. அவர் அளித்த ஒரு பேட்டியில், ‘எங்களை பொறுத்தவரை நாங்கள் இளம் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். அவர்கள் தங்களை நிலைநிறுத்திக்கொண்டு, நீண்ட காலம் விளையாடும் வகையில் அதிக வாய்ப்பு வழங்குகிறோம். டோனியின் எதிர்காலம் குறித்து அவர் தான் முடிவு எடுக்க வேண்டும். தேர்வு குழு தலைவராக இருந்த வரை எனது பணியை தவிர்த்து பார்த்தால், நான் டோனியின் மிகப்பெரிய ரசிகன். அவரது சாதனைகள் அளப்பரியது. அவரது தலைமையில் இந்திய அணி இரண்டு உலக கோப்பை மற்றும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை வென்றுள்ளது. டெஸ்டில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறது. எனவே டோனியின் தலைமை குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து அவர் தான் முடிவு மேற்கொள்ள வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com