எம்எஸ்கே பிரசாத்திற்குப் பதில் மாற்று நபர் விரைவில் நியமிக்கப்படுவார்: கங்குலி

தேர்வுக்குழுவின் தலைவராக உள்ள எம்எஸ்கே பிரசாத் விரைவில் மாற்றப்படுவார் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
சவுரவ் கங்குலி, எம்எஸ்கே பிரசாத்
சவுரவ் கங்குலி, எம்எஸ்கே பிரசாத்
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் தலைவர் எம்எஸ்கே பிரசாத் உள்பட ஐந்து பேர் உள்ளனர். இதில் எம்எஸ்கே பிரசாத் மற்றும் ககன் கோடா ஆகியோரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.

தேவங் காந்தி, ஜத்தின் பரஞ்பே, சரன்தீப் சிங் ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த வருடம் வரை இருக்கிறது. ஒட்டுமொத்தமாக தேர்வுக்குழுவினர் நீக்கப்பட்டு புதிதான தேர்வுக்குழு நியமிக்கப்படும் என பிசிசிஐ தலைவர் கங்குலி ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில் பதவிக்காலம் முடிவடையும் எம்எஸ்கே பிரசாத், ககன்கோடா ஆகியோருக்கான மாற்று நபர்கள் மட்டுமே நியமிக்கப்படுவர் என கங்குலி தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ஆலோசனைக்குழு இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அறிவிக்கப்படும். குழுவில் இடம் பெறும் வீரர்கள் பெயரை அறிவிக்க முடியாது. ஏனென்றால், நாங்கள் அதற்கான வீரர்களை அணுகும்போது அவர்கள் முடிவை தெரிவிக்க ஒன்றிரண்டு நாட்கள் அவகாசம் கேட்பார்கள். இதுகுறித்து நாங்கள் விரைவில் அறிவிப்போம்’’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com