பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ம.பி. வீரரின் குடும்பத்துக்கு ஒரு கோடி நிதியுதவி

பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு மத்திய பிரதேசம் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ம.பி. வீரரின் குடும்பத்துக்கு ஒரு கோடி நிதியுதவி
Published on

போபால்:

பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு மத்திய பிரதேசம் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் கடந்த 4-ம் தேதி பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ராம் அவதார் (27), வீர மரணம் அடைந்தார். இவர் மத்திய பிரதேசம் மாநிலம் குவலியரை சேர்ந்தவர்.

ராம் அவதாரின் வீர மரணத்துக்கு ம.பி. அரசு ஒரு கோடி நிதி அளிக்கும் என மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ம.பி.யின் குவாலியர் மாவட்டத்தில் உள்ள பரூவா கிராமத்தில் உள்ள ராம் அவதார் வீட்டுக்கு முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் நேற்று சென்றார். அவரது குடும்பத்தினரிடம் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

அவரது தாயாரிடம் மாதந்தோறும் அரசு சார்பில் வழங்கப்படும் வீடு மற்றும் ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் பெறுவதற்கான அரசாணையை வழங்கினார். விரைவில் அவரது சிலை நிறுவப்படும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com