நோனாங்குப்பத்தில் நடைபயிற்சி சென்றவர் மோட்டார் சைக்கிள் மோதி பலி

நோனாங்குப்பத்தில் நடைபயிற்சி சென்ற முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.
நோனாங்குப்பத்தில் நடைபயிற்சி சென்றவர் மோட்டார் சைக்கிள் மோதி பலி
Published on

பாகூர்:

அரியாங்குப்பம் டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது72). இவர் சம்பவத்தன்று நோனாங்குப்பம் சுண்ணாம்பாறு பழைய பாலத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார். பின்னர் வீட்டுக்கு செல்ல படகுகுழாம் எதிரே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக தனபால் மீது மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்ட தனபால் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று மாலை தனபால் பரிதாபமாக இறந்து போனார்.

இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்வந்திரி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com