பரமக்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி அரசு விடுதி சமையலர் உள்பட 2 பேர் பலி

பரமக்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
விபத்து
விபத்து
Published on

பரமக்குடி:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் ராமு (வயது 50). இவர் அரசு ஆதிதிராவிடர் விடுதி சமையலராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு ராமு மானாமதுரையில் இருந்து மோட்டார் சைக்கிளில் ராமநாதபுரத்துக்கு புறப்பட்டார்.

பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் பகுதியில் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ராமு ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இதில் ராமு மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மதுரை மாடக்குளத்தை சேர்ந்த பூராசு மகன் சிவகுரு (26), பிரசன்னா (22) ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

ரத்தவெள்ளத்தில் படு காயமடைந்த ராமு மற்றும் சிவகுரு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரசன் னாவை அப்பகுதி மக்கள் மீட்டு பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபின் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு பிரசன்னா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து தொடர்பாக பரமக்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com