மேலும் பல விமான நிறுவனங்கள் திவாகர் ரெட்டிக்கு தடை

விசாகப்பட்டினம் விமான நிலையத்தில், விமான நிலைய அதிகாரிகளிடம் ரகளையில் ஈடுபட்டதாக தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. ஜே.சி.திவாகர் ரெட்டிக்கு பெரும்பாலான உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுவனங்கள் தடை விதித்துள்ளன.
மேலும் பல விமான நிறுவனங்கள் திவாகர் ரெட்டிக்கு தடை
Published on

விசாகப்பட்டினம் விமான நிலையத்தில், விமான நிலைய அதிகாரிகளிடம் ரகளையில் ஈடுபட்டதாக தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. ஜே.சி.திவாகர் ரெட்டிக்கு பெரும்பாலான உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுவனங்கள் தடை விதித்துள்ளன.

இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்து துறை மந்திரி கூறுகையில், சிசிடிவி வீடியோவில் அனைத்தும் அப்பட்டமாக தெரிய வருகிறது. மக்கள், எம்.பி.க்கள் என யாராக இருந்தாலும் ஒரே விதிகள் தான். யாருக்காகவும் விதிகளை மாற்ற முடியாது என்று கூறியுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. ஜே.சி.திவாகர் ரெட்டி, நேற்று முன்தினம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட இருந்தார்.

அவரது வருகை தாமதமானதால் பயணிகள் செல்ல வேண்டிய பாதுகாப்பு வழி அடைக்கப்பட்டது. அதன்பின்னர் யாரும் அந்தவழியாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்நிலையில், விமானம் புறப்பட்டுச் சென்ற அரைமணிநேரம் கழித்து விமான நிலையத்திற்கு வந்த ரெட்டி இண்டிகோ விமான நிறுவன அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டாராம். இதையடுத்து இண்டிகோ, ஏர் இந்தியா (உள்நாட்டு), ஸ்பைஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் தடை விதித்தன.

இந்நிலையில், விஸ்டாரா, கோ ஏர், ஏர் ஏசியா (உள்நாட்டு) உள்ளிட்ட பல விமான போக்குவரத்து நிறுவனங்கள் ரெட்டியின் உள்நாட்டு போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com