ஆர்.கே. நகர் தேர்தல்: மூவேந்தர் முன்னணி கழகம் தி.மு.க.வுக்கு ஆதரவு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசுக்கு மூவேந்தர் முன்னணி கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
Published on

சென்னை:

அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசுக்கு தார்மீக ஆதரவு தெரிவித்துள்ளோம். தமிழ்நாட்டில் உண்மையான ஜனநாயகம் மலர வேண்டும் என்றால் அது இனி உதயசூரியனால் மட்டுமே முடியும். சந்தர்ப்பவாத அரசியலும், சுயநல அரசியலும் ஒன்று சேர்ந்து தமிழகத்தை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது. ஆர்.கே.நகர் மக்கள் நிச்சயம் இன்றைய ஆட்சியாளர்களை தூக்கி எறிவார்கள். தி.மு.க.வை நிச்சயம் வெற்றி பெற வைப்பார்கள்.

தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் வெற்றி பெற எங்களது அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் தேர்தல் களத்தில் தீவிர களப் பணியாற்றிடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com