மூலக்கரைப்பட்டி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது

மூலக்கரைப்பட்டி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

நெல்லை:

நாங்குநேரி அருகே உள்ள மூலக்கரைப்பட்டி தான்தோன்றி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி விஜயலட்சுமி. ஜெயராமன் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த சரவணன் (வயது36) என்பவரிடம் ரூ.2 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். அதை அவர் திருப்பி கொடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் சரவணன், ஜெயராமன் வீட்டிற்கு சென்று அங்கிருந்த அவரது மனைவி விஜயலட்சுமியிடம் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விஜயலட்சுமி மூலக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com