வட கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் வட கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
வட கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
Published on

சென்னை:

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கியது. வழக்கத்தை விட ஒரு வாரம் காலதாமதாக பருவமழை தொடங்கினாலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த வட கிழக்கு பருவமழை தொடங்கிய ஓரிரு நாட்களில் குறைவான மழை பெய்தாலும், கடந்த 31-ந் தேதி முதல் பருவமழை அதன் உக்கிரத்தை காட்டியது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சில வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

இதனால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல குடியிருப்பு பகுதிகள் மழை நீரில் மூழ்கின. சென்னையில் வழக்கத்தை விட அதிகமாக பெய்த கனமழையால் மாநகரமே ஸ்தம்பித்தது. பல குடியிருப்புகள் நீரில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். இருந்தபோதும், சென்னை மக்களின் தண்ணீர் பிரச்சினைக்கு ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மழை சற்று ஓய்ந்ததால் சென்னையில் தாழ்வான பகுதிகள் மற்றும் பள்ளி வளாகங்களில் தேங்கியிருந்த மழைநீர் வடிய தொடங்கியது. சில நாட்களாக தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த பள்ளிகள் திறக்கப்பட்டன.

சென்னையில், நேற்று முன்தினமும், நேற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை நேரத்தில் லேசான சாரல் மழை பெய்தது.

இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் அடுத்த 48 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com