வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாச்சு... மந்திரி பேசும் வீடியோ ‘வைரல்’

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாச்சு... வெற்றி பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை என்று மந்திரி பபன்ராவ் லோனிகர் பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
பபன்ராவ் லோனிகர்
பபன்ராவ் லோனிகர்
Published on

மகாராஷ்டிரத்தில் வருகிற 21-ந்தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், பா.ஜனதாவை சேர்ந்த மாநில குடிநீர் வினியோகத்துறை மந்திரி பபன்ராவ் லோனிகர் ஜல்னா மாவட்டத்தில் உள்ள பார்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அந்த தொகுதியில் தேர்தல் பிரசாரம் உச்ச கட்டத்தை எட்டி உள்ள நிலையில், தேர்தலில் வெற்றி பெற வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறி மந்திரி பபன்ராவ் லோனிகர் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

ஜல்னாவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் அவர், நான் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்து விட்டேன். இதனால் தேர்தலில் வெற்றி பெறுவதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை என பேசும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com