மும்பையில் 3 வருடங்களில் இல்லாத அளவிற்கு கொட்டி தீர்த்த கனமழை

மும்பை மாநகரில் மூன்று வருடங்களில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்தது. அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மும்பையில் 3 வருடங்களில் இல்லாத அளவிற்கு கொட்டி தீர்த்த கனமழை
Published on

மும்பை:

மும்பையில் நேற்று காலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. 12 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால் மும்பை நகரத்தில் குளுமையான சூழ்நிலை நிலவியது. மழையின் அளவு 126.6 மி.மீட்டராக பதிவாகிவுள்ளது. இது கடந்த மூன்று வருடங்களில் பெய்த மழைகளில் அதிக அளவாக பதிவாகியுள்ளது.

கனமழையால் ஏரிகளில் 68 சதவீதம் நிரம்பியுள்ளது. இது நகரத்தின் ஒரு வருட நீர் தேவைக்கு போதுமானதாகும். கொலாபாவில் 19.8 மி.மீட்டராகவும். சண்டாகுரூஸில் 50.8 மி.மீட்டராகவும் மழை பதிவாகியுள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மும்பை வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி ஷுபான்கி ஃபட் கூறுகையில்,  ’ஆந்திராவிற்கு அருகில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிப்பதால் மும்பை உட்பட கடலோர பகுதியில் மழை பெய்யும். இம்மழை ஜூலை 20 ஆம் தேதிக்கு பிறகு குறைய வாய்ப்புள்ளது ’என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com