காங்கிரஸ் தலைசிறந்த ஆளுமைகளை நாட்டுக்கு தந்துள்ளது - ஆர்எஸ்எஸ் தலைவர் திடீர் புகழாரம்

காங்கிரஸின் வடிவத்தில் ஒரு பெரிய சுதந்திர இயக்கம் நாட்டில் வளர்ந்தது. அந்த இயக்கம் பல தலைசிறந்த ஆளுமைகளை பெற்றெடுத்தது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று பேசினார். #RSSVision #MohanBhagwat
காங்கிரஸ் தலைசிறந்த ஆளுமைகளை நாட்டுக்கு தந்துள்ளது - ஆர்எஸ்எஸ் தலைவர் திடீர் புகழாரம்
Published on

புதுடெல்லி:

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் எதிர்கால இந்தியா என்ற 3 நாள் கருத்தரங்கம் டெல்லியில் இன்று தொடங்கியது. இந்த கருத்தரங்கில் மத்திய மந்திரிகள், பாலிவுட் பிரபலங்கள் உள்பட பல துறைகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், காங்கிஸ் கட்சியை புகழ்ந்து பேசினார். “காங்கிரஸின் வடிவத்தில் ஒரு பெரிய சுதந்திர இயக்கம் நாட்டில் வளர்ந்தது. அந்த இயக்கம் எல்லாவற்றையும் தியாகம் செய்யக் கூடிய பல தலைசிறந்த ஆளுமைகளை பெற்றெடுத்தது. அவர்கள் நம்மை இன்றும் ஊக்குவித்து வருகின்றனர். அந்த இயக்கமானது சாதாரண மக்களை சுதந்திர போராட்டத்தில் இணைப்பதற்கு ஊக்குவித்தது. சுதந்திரம் அடைந்ததில் காங்கிரஸுக்கு பெரிய பங்கு உண்டு” என கூறினார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், மோகன் பகவத் காங்கிரஸை புகழ்ந்துள்ளது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com