பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள சீனா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

சீனாவில் நடைபெறும் 9-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் மாதம் சியாமென் செல்லப்போவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள சீனா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
Published on

புதுடெல்லி:

சீனாவில் செப்டம்பர் 3 முதல் 5 ஆம் தேதி வரை 9-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற உள்ளது. சீன அதிபரின் அழைபை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி சீனாவிற்கு பயணம் மேற்கொண்டு இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டோக்கலாம் எல்லைப்பகுதியில் சீனாவும் இந்தியாவும் படைகளை திரும்ப பெற்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. சீனா பயணத்தை முடித்து விட்டு மோடி மியான்மர் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார்.

மியான்மர் அதிபர் யு ஹிதின் கியாவின் அழைப்பை ஏற்று செப்டம்பர் மாதம் 5 முதல் 7 வரை அங்கு பயணம் மேற்கொள்கிறார் மோடி. இந்த சுற்றுப்பயணத்தின்போது, மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகியுடன் மோடி ஆலோசனை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com