மறைந்த சுஷ்மா சுவராஜ் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி நேரில் அஞ்சலி

மத்திய வெளியுறவுத்துறை முன்னாள் மந்திரி சுஷ்மா சுவராஜ் மறைவையடுத்து, அவரது உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , பிரதமர் மோடி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுஷ்மா சுவராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் காட்சி
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுஷ்மா சுவராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் காட்சி
Published on

முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான  சுஷ்மா சுவராஜ் (67),  நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

சுஷ்மா மறைவின் காரணமாக டெல்லியில் 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. பாஜக தலைவர்கள், மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதன்பின் மறைந்த முன்னாள் மத்திய-மந்திரி சுஷ்மா சுவராஜின் உடல் பாஜக தலைமை அலுவலகத்தில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை  கட்சியினர் மரியாதை செலுத்த வைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com