புதிய மந்திரிகளுக்கு மோடி வாழ்த்து

மத்திய மந்திரிசபையில் பதவி ஏற்ற புதிய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.
புதிய மந்திரிகளுக்கு மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி:

மத்திய மந்திரிசபை நேற்று மாற்றி அமைக்கப்பட்டது. இதில் புதிய மந்திரிகளாக 9 பேர் பதவி ஏற்றனர்.

பிரதமர் மோடி, புதிய மந்திரிகளுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர், “இன்று (நேற்று) பதவி ஏற்றுள்ள மந்திரிகளுக்கு எனது வாழ்த்துகள். அவர்களது அனுபவமும், விவேகமும் மத்திய மந்திரிசபைக்கு மிகுந்த மதிப்பை சேர்க்கும்” என கூறி உள்ளார்.

கேபினட் மந்திரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ள தர்மேந்திர பிரதான், பியூஸ் கோயல், நிர்மலா சீதாராமன், முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோருக்கு தனியாக அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com