

புதுடெல்லி:
நாடாளுமன்றத்தில் கணக்கு தணிக்கையாளர் குழு சமர்பித்த அறிக்கையில், அறிக்கையில் ராணுவத்தில் நிலவும் ஆயுதப் பற்றாக்குறை குறித்த தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
இந்திய ராணுவத்தில் ஆயுத பற்றாக்குறையால், போர் வந்தால் 10 நாட்களுக்குதான் ஆயுதங்கள் போதுமானதாக இருக்கும் என்றும் அதிர்ச்சியூட்டும் தகவலை சிஏஜி அறிக்கை வெளிக்கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில், மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் நாட்டின் பாதுகாப்பில் லேசாக இருப்பதாக சி.ஏ.ஜி. அறிக்கையை சுட்டிக் காட்டி காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
மோடி பொறுப்பேற்ற போது முழு நேர பாதுகாப்பு மந்திரியே இல்லை. பின்னர், தீவிர தன்மை இல்லாத செயலாற்றும் தன்மையில்லாத மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு மந்திரியாக பொறுப்பேற்றார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறுகையில், ”சி.ஏ.ஜி. அறிக்கை பயமுறுத்துகிறது. பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில் பதற்றம் நீடித்து வருகிறது. துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனால், ராணுவத்திற்கான தேவைகளை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் நடக்க இருக்கும் நிகழ்விற்கு பிரதமர் மோடியும், அவரது அரசாங்கமும் பதில் சொல்ல வேண்டி இருக்கும்” என்றார்.