நான்காவது முறையாக பிரதமராகும் ஷேக் ஹசினாவுக்கு மோடி வாழ்த்து

வங்காளதேசம் பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்று நான்காவது முறை பிரதமராக பொறுப்பேற்கும் ஷேக் ஹசினாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். #PMModi #BangladeshPM #Hasina
நான்காவது முறையாக பிரதமராகும் ஷேக் ஹசினாவுக்கு மோடி வாழ்த்து
Published on

வங்காளதேசத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு நேற்று  நடைபெற்ற தேர்தலில் 287 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் நான்காவது முறையாக வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசினா ஆட்சி அமைக்கவுள்ளார்.
 
கோபால்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட ஷேக் ஹசினா 2,29,539 வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர் வெறும் 123 வாக்குகளை வாங்கி படுதோல்வி அடைந்தார்.

இந்நிலையில்,  நான்காவது முறையாக பிரதமராக பொறுப்பேற்கும் ஷேக் ஹசினாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com