அம்பானிக்கு ஒரு இந்தியா, விவசாயிகளுக்கு ஒரு இந்தியா படைக்கிறார் மோடி - ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடி, அனில் அம்பானிக்கு ஒரு இந்தியாவையும், விவசாயிகளுக்கு ஒரு இந்தியாவையும் படைக்கிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi #Modi #AnilAmbani #NasikFormer
அம்பானிக்கு ஒரு இந்தியா, விவசாயிகளுக்கு ஒரு இந்தியா படைக்கிறார் மோடி - ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி:

மகாரஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள நிபாட் பகுதியில் வசித்து வருபவர் சஞ்சய் சாதே. விவசாயியான இவர், தனது நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயத்தை அறுவடை செய்து நாசிக் மார்க்கெட் கொண்டு சென்றார். 

வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காததால் மனம் நொந்துபோன சஞ்சய், ஒரு கிலோவுக்கு 1.40 ரூபாய் என பேசி முடித்தார். தன்னிடம் இருந்த மொத்த வெங்காயத்தையும் விற்றார்.

4 மாத காலம் கஷ்டப்பட்டு உழைத்தும் சரியான பலன் கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் இருந்த சஞ்சய் சாதே, வெங்காயம் விற்று கிடைத்த 1064 ரூபாய் பணத்தை தபால் அலுவலகம் மூலம் பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் டெல்லியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, மகாராஷ்டிரா விவசாயி வெங்காயம் விற்று பிரதமர் அலுவலகத்துக்கு நிதி அனுப்பிய செய்தியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது வலைத்தளத்தில் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி இருவிதமான இந்தியாவை உருவாக்குகிறார்.

ரபேல் போர் விமானம் தொடர்பான ஒப்பந்தத்தில் எந்த வேலையும் செய்யாமல் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளதன் மூலம் அனில் அம்பானிக்கு ஒரு இந்தியாவையும், 750 கிலோ வெங்காயத்தை வெறும் 1064 ரூபாய்க்கு விற்பதன் மூலம் விவசாயிகளுக்கு ஒரு இந்தியாவையும் படைக்கிறார் என பதிவிட்டுள்ளார். #RahulGandhi #Modi #AnilAmbani #NasikFormer

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com