டிரம்ப்பை கிண்டல் செய்து ஆடியோ வெளியிட்ட ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் புதிய தலைவன்

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் புதிய தலைவனான இப்ராகிம், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கிண்டல் செய்து ஆடியோ வெளியிட்டுள்ளான்.
டிரம்ப்[
டிரம்ப்[
Published on

ஐ.எஸ்.  பயங்கரவாத இயக்கத்தின் தலைவனாக இருந்த பக்தாதி சமீபத்தில் அமெரிக்க சிறப்பு படையால் சுற்றி வளைக்கப்பட்டான்.

தப்பிக்க முடியாது என்பதால் குண்டுகளை வெடிக்க வைத்து பக்தாதி தற்கொலை செய்து கொண்டான். சிதறிய அவனது உடல் கடலில் வீசப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இவன் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் இஸ்லாமிய சட்டப்பிரிவின் தலைவனாக இருந்து வந்தான். இவனை பற்றி வெளியில் அதிகம் தெரியாது. இதனால் இவனை பற்றிய தகவல்களை அமெரிக்காவும், சிரியாவும் திரட்டி வருகின்றன.

பக்தாதி கொல்லப்பட்டதும் அவன் நாய் போல கத்திக்கொண்டே செத்தான் என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் வெளியிட்ட பேட்டிகளில் கூறி இருந்தார். இதற்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் புதிய தலைவன் இப்ராகிம் பதிலடி கொடுத்து இருக்கிறான். அவன் ஒரு ஆடியோ வெளியிட்டு இருக்கிறான். அதில் அவன் கூறி இருப்பதாவது:-

டிரம்ப் ஒரு வேடிக்கையான மனிதன். எங்களை பற்றி தெரியவில்லை. எங்களது ஆதரவாளர்கள் அமெரிக்காவிலும் இருக்கிறார்கள். உரிய நேரத்தில் பதிலடி கொடுப்பார்கள்.

அமெரிக்கா எங்களை அழித்து விட்டதாக கொண்டாட வேண்டாம். நாங்கள் புதிய நபரை தேர்வு செய்து விட்டோம்.

விரைவில் பதிலடி வரும். அது அமெரிக்காவால் மறக்க முடியாமல் இருக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com