குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் 24ம் தேதி போராட்டம்

குடிநீர் பற்றாக்குறையை கண்டித்தும், தண்ணீர் பஞ்சத்தை போக்க வலியுறுத்தியும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 24-ம் தேதி சென்னையில் போராட்டம் நடத்த உள்ளார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் 24ம் தேதி போராட்டம்
Published on

சென்னை:

திமுக சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஜூன் 24 (திங்களன்று) காலை 9.30 மணியளவில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மக்களின் குடிநீர் தேவையை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.

குடிநீர் பஞ்சத்தைப் போக்க மாநில அரசு உடனே செயல்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில், தி.மு.க.,வின் சென்னை மாநகர நிர்வாகிகள், செயல்வீரர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com