பத்ம விருதுக்கு தேர்வானவர்களுக்கு முக ஸ்டாலின் வாழ்த்து

பத்ம விருதுக்கு தேர்வானவர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்
Published on

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தி வருமாறு:-

இந்தியாவின் மிக உயரிய விருதான பத்ம விருதுகள் தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுகளைப் பெறும் சமூக சேவை மூதாட்டி கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணன், தொழிலதிபர் வேணு சீனிவாசன், இசைக்கலைஞர்களான லலிதா சிதம்பரம், சரோஜா சிதம்பரம், ஓவியர் மனோகர் தேவதாஸ் ஆகியோருக்கு எனது இதயமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் பத்ம விருது பெறும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com