ஜார்க்கண்ட் முதல்மந்திரி பதவியேற்பு விழா - மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் ராஞ்சி பயணம்

ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க திமுக தலைவர் ஸ்டாலின் விமானம் மூலம் ராஞ்சிக்கு புறப்பட்டு சென்றார்.
முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்
Published on

சென்னை:

81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களைவிட கூடுதலான இடங்களில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான  ஹேமந்த் சோரன் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் மிக அதிகமான வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றார்.

ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன், மாநில கவர்னர் திரவுபதி முர்முவை சந்தித்து 50 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் அளித்தார், அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஹேமந்த் சோரன், டிசம்பர் 29-ம் தேதி பதவியேற்க உள்ளேன் என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் இன்று மதியம் பதவியேற்கிறார். 

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் ராஞ்சி புறப்பட்டுச் சென்றார். அவருடன் எம்.பி.க்கள் டி.ஆர். பாலு மற்றும் கனிமொழி ஆகியோரும் விழாவில் பங்கேற்க சென்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com