

நியூசிலாந்துக்கு எதிராக சதம் அடித்த இந்திய கேப்டன் மிதாலி ராஜ் கூறியதாவது:-
“நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனென்றால் எங்களில் பலருக்கு இது கடைசி உலக கோப்பையாக இருக்கும். எங்களின் முதல் இலக்கு அரையிறுதிக்கு தகுதி பெறுவதாக இருந்தது.
நான் நாட்டுக்காக ரன் குவிப்பில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எப்போதும் நான் நிறைய ரன் குவிக்கவே கனவு காணுகிறேன். என்னுடைய ரன் வேட்கை குறையாது.
இந்த ஆட்டத்தில் இரண்டு பார்ட்னர்ஷிப் முக்கியமாக இருந்தது. ஹர்மன்பிரீத் கவுர், வேதா சிறப்பாக விளையாடினார்கள். 250 ரன்னுக்கு மேல் சேசிங் செய்வதில் நெருக்கடி இருக்கும். முதல் 4 அணிகளுக்குள் வரவேண்டும் என்றால் தோல்விக்கு பிறகு மீண்டு வலுவாக வர வேண்டியது மிகவும் முக்கியம்“ என்றார்.