உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்

டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லர் இன்று மோடியை தன் குடும்பத்துடன் சந்தித்து பேசினார்.
உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்
Published on

சீனாவின் சான்யா சிட்டியில், நவம்பர் 18-ம் தேதி நடைபெற்ற உலக அழகிப் போட்டியில்  அரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லர் (20) உலக அழகி  பட்டம்  வென்றார். அவருக்கு பல தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.


அவருக்கு பிரதமர் மோடி தனது பாராட்டை தெரிவித்தார். உலக அழகியாக மனுஷி சில்லர் வெற்றி பெற்றது பெருமையாக உள்ளது என மோடி டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, இன்று காலை மோடி சந்திக்க போவதாக மனுஷி சில்லர் தனது டுவிட்டரில் பதிவு செய்தார். அது குறித்து மிகவும் ஆர்வமாக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com