பீகார்: வங்கியில் இருந்து ரூ.12 லட்சம் கொள்ளை - பட்டப்பகலில் துணிகரம்

பீகார் மாநிலம் கோபால்கன்ஞ் மாவட்டத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஆயுதங்களுடன் நுழைந்த திருடர்கள் 12 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.
பீகார்: வங்கியில் இருந்து ரூ.12 லட்சம் கொள்ளை - பட்டப்பகலில் துணிகரம்
Published on

பாட்னா:

பீகார் மாநிலம் கோபால்கன்ஞ் மாவட்டத்தில் உள்ள சசமுசா பசார் நகர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் இன்று 8 திருடர்கள் ஆயுதங்களுடன் நுழைந்தனர். ஆயுதங்களை காட்டி மிரட்டி வங்கியில் இருந்த 12 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட சரியான தொகை தெரியவில்லை. இது வங்கி அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர் என கூறினர்.

சிசிடிவி பதிவேட்டை சோதனை செய்த போலீசார் கொள்ளையர்களில் மூன்று பேரை அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

பட்ட பகலில் ஆயுதங்களுடன் நுழைந்த திருடர்கள் 12 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com