மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

நாமக்கல் மாவட்டம் லத்துவாடி அருகே மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் லத்துவாடி அருகே உள்ள தொட்டிப்பட்டியை சேர்ந்த விவசாயி ஒருவரின் 15 வயது மகள் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி என்.புதுப்பட்டி அருகே உள்ள மேலப்பட்டியை சேர்ந்த பழனிசாமி மகன் மணிகண்டன் (வயது 23), அந்த மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து பாதிக் கப்பட்ட மாணவியின் தாயார் மோகனூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டன் மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது. பின்னர் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே இந்த வழக்கு நேற்று நாமக்கல் மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மணிகண்டனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி உத்தரவு விட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com