மீஞ்சூர் அருகே மனைவி தற்கொலை வழக்கில் போலீஸ்காரர் கைது

மீஞ்சூர் அருகே மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த மேலூரை சேர்ந்தவர் ராஜாராம். ஆவடியில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி பத்மபிரியா (வயது 24). இவர்களுக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்வு திருமணம் நடந்தது.

வரதட்சணை தகராறில் பத்மபிரியா வல்லூர் கேம்ப் பகுயில் வசிக்கும் பெற்றோர்வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்து விட்டார்.

நேற்று முன்தினம் மாலை பத்மபிரியா வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் கணவர் ராஜாராம், அவரது தாய், அண்ணன், அண்ணி ஆகியோர் மீது குற்றம்சாட்டி உள்ளார். இந்த நிலையில் போலீஸ்காரர் ராஜாராம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com