டெங்கு காய்ச்சலால் பீதி வேண்டாம்: சட்டசபையில் அமைச்சர் விளக்கம்

டெங்கு காய்ச்சல் குறித்து யாரும் பீதி அடைய வேண்டாம் என சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
டெங்கு காய்ச்சலால் பீதி வேண்டாம்: சட்டசபையில் அமைச்சர் விளக்கம்
Published on

சென்னை:

சட்டசபையில் இன்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (தி.மு.க.) கேள்வி நேரத்தின் போது பேசும்போது, ‘13 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகம் பரவுவதாக அமைச்சரே கூறியிருக்கிறார். கால்நடைத்துறை அமைச்சரின் ஊரில் டெங்கு காய்ச்சலால் ஒருவர் உயிரிழந்துள்ளார். டெங்கு காய்ச்சலால் மக்கள் பீதியில் உள்ளனர். மர்ம காய்ச்சலும் பல இடங்களில் உள்ளது. டாக்டர்கள் பற்றாக்குறையால் மர்மகாய்ச்சல் பரவுகிறது என்றார்.

இதற்கு அமைச்சர் விஜய பாஸ்கர் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘டாக்டர் பற்றாக்குறையால் காய்ச்சல் பரவுவதாக கூறுவது தவறு. ஏற்கனவே முதல்-அமைச்சர் 500 டாக்டர்களுக்கு பணி நியமனம் வழங்கி இருக்கிறார். 600 செவிலியர்களுக்கு நாளை பணி ஆணை வழங்குகிறார். காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. 100 சதவீதம் கட்டுக்குள் உள்ளது. யாரும் பீதி அடைய வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com