அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதி
Published on

சென்னை:

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் வெல்லமண்டி நடராஜன். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு நேற்று திடீரென்று இருதயவலி ஏற்பட்டது.

இதையடுத்து உடனே அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. பின்னர் அவருக்கு, ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ சிகிச்சை செய்வது நல்லது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவர் நன்றாக இருக்கிறார்.

அமைச்சருக்கு ஏற்பட்ட உடல் நல பாதிப்பு குறித்தும், அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் ஆஸ்பத்திரி சார்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.  #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com